ஹாங்காங்கில் ரசிகர்கள் குதூகலம்: மீண்டும் வெளியாகும் ‘பேட்மேன்’ சீரியஸ் படங்கள்
May 22, 2020 / 06:34 AM IST
|Follow Us
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த பேட்மேன் சீரியஸ் படங்களை ஹாங்காங்கில் உள்ள திரையரங்கில் குறிப்பிட்ட காலத்திற்கு திரையிட உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது.
உலக சினிமாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள் கிறிஸ்டோபர் நோலனை பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. அவர் இயக்கிய பேட்மேன் சீரியஸ் படத்தை காவிய படைத்து ரசித்து பார்த்து வருகிறார்கள். சினிமாவை பற்றி பேசத் தெரியாத வெகுஜன
ரசிகனையும் கவர்ந்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கை ஹாங்காங் அரசு எச்சரிக்கையுடன் தளர்த்தி வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள திரையரங்குகளை சில நிபந்தனைகளுடன் திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து ஹாங்காங் திரையரங்கில் ஜூன் 4ஆம் தேதி பேட்மேன் பிகின்ஸ் (2005), ஜூன் 11ஆம் தேதி தி டார்க் நைட் (2008), ஜூன் 18ஆம் தேதி தி டார்க் நைட் ரைசஸ் (2012) ஆகிய படங்கள் திரையிடப்படுவதாக வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் படங்கள் அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாது ஜூலை 17ஆம் தேதி கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீனெட்’ (TENET) திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகவுள்ளது.