சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏன் திருடனும் ?

  • January 21, 2023 / 06:39 PM IST

பயில்வான் ரங்கநாதன் பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகர் இவர் . சில வலையொளி சேனல்களில் இவர் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம் . அந்த வகையில் தற்போது இவர் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேசி உள்ளார் .

விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் என்று சிலர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் சிலர் விஜய் தான் இன்று சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வருகிறார்கள். இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

இது பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன், எப்போதுமே நான்தான் அடுத்த மக்கள் திலகம், அடுத்த நடிகர் திலகம் அடுத்த உலக நாயகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் பட்டமும் அது ரஜினி ஒருவருக்கு தான் பொருந்தும். அந்த பட்டத்தையே இப்போது திருடுகிறார்கள். எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆக்டிவாக இருக்கும் தருணத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறுகின்றனர் . விஜய் படங்கள் ஹிட் கொடுத்தாலும், கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும், ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் காலகட்டத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு தான். அதே சமயம் நடிகர் விஜய் , இந்தப் பிரச்சினையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பது சரி இல்லை . விஜய் மட்டும்
ஏதாவது ஒரு மேடையில் சென்னை சூப்பர் ஸ்டார் என்று கூற வேண்டாம், ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று ஏதாவது ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எந்த சர்ச்சையும் அவருக்கு வராது என்று பேசி உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.