நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் ‘பீஸ்ட்’ பட நடிகை… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அபர்ணா தாஸ். இவர் ‘ஞான் பிரகாஷன், மனோஹரம்’ ஆகிய மலையாள படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது, இவர் ‘பீஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அபர்ணா தாஸ் தமிழ் மொழியில் அறிமுகமாகும் முதல் படம் இதுதானாம். இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இதனை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். அபர்ணா தாஸ் நீச்சல் குளத்தில் குளித்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.