‘கே.ஜி.எஃப் 2’ ட்ரெய்லரை புகழ்ந்து தள்ளிய ‘பீஸ்ட்’ இயக்குநர் நெல்சன்… அதற்கு இயக்குநர் பிரஷாந்த் நீல் சொன்ன பதில் என்ன தெரியுமா?

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவரின் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதற்கு ஒரு நாள் முன்பு ஏப்ரல் 13-ஆம் தேதி ‘தளபதி’ விஜய்யின் ‘பீஸ்ட்’ ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தற்போது, ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கே.ஜி.எஃப் 2’வின் ட்ரெய்லரை பார்த்து பாராட்டியதுடன், படத்தை பார்க்க தான் ஆவலுடன் வெயிட் பண்ணுவதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு இயக்குநர் பிரஷாந்த் நீல் “நன்றி” தெரிவித்ததுடன், ‘பீஸ்ட்’ படத்தை பார்க்க தான் ஆவலுடன் வெயிட் பண்ணுவதாக கூறியுள்ளார்.

Share.