Shine Tom Chacko : வைரலாகும் ‘பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள்X’ பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

  • January 4, 2024 / 05:57 PM IST

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஹீரோவாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். ‘பீஸ்ட்’ படத்துக்கு பிறகு கடந்த ஆண்டு (2023) வெளியான ‘ஜிகர்தண்டா டபுள்X’ படத்திலும் நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கும், தனுஜா என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இது ஷைன் டாம் சாக்கோவுக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus