‘சிவாஜி’ டு ‘அண்ணாத்த’… ‘ஜெயிலர்’-க்கு முன்பு ரஜினி நடித்த கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக்!

  • August 24, 2022 / 10:24 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’-க்கு முன்பு ரஜினி நடித்த கடைசி பத்து படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் இதோ..

1.சிவாஜி :

ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘சிவாஜி’. தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்க, ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இதில் ரஜினி ‘சிவாஜி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

2.எந்திரன் :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘எந்திரன்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், கலாபவன் மணி, டெல்லி குமார், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

3.கோச்சடையான் :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கோச்சடையான்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் கதை-திரைக்கதை-வசனம் எழுதியிருந்த இந்த படத்தை ரஜினியின் மகளும், பிரபல இயக்குநருமான சௌந்தர்யா இயக்கியிருந்தார்.

4.லிங்கா :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘லிங்கா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஷெட்டி, ஜெகபதி பாபு, சந்தானம், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

5.கபாலி :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கபாலி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, கிஷோர், வின்ஸ்டன் சாவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6.காலா :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காலா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

7.2.0 :

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘2.0’. 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், ஐசரி கணேஷ், மயில்சாமி, சுதான்ஷு பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர்.

8.பேட்ட :

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பேட்ட’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, மாளவிகா மோகனன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

9.தர்பார் :

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தர்பார்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நிவேதா தாமஸ், யோகி பாபு, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஸ்ரீமன், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.

10.அண்ணாத்த :

ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஜெகபதி பாபு, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus