பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இப்போது இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜவான்’ படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று ஷாருக்கான் மற்றும் நயன்தாரா திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.