‘திருப்பாச்சி’ பட நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு… உதவி கேட்டு வெளியிட்ட உருக்கமான வீடியோ!

  • December 17, 2020 / 05:45 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பெஞ்சமின். இவர் சேரனின் ‘ஆட்டோகிராஃப்’, விக்ரமின் ‘அருள்’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘வசூல் ராஜா MBBS’, ‘தளபதி’ விஜய்யின் ‘திருப்பாச்சி’, சரத்குமாரின் ‘ஐயா’, ‘தல’ அஜித்தின் ‘திருப்பதி’, தனுஷின் ‘வேங்கை’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது,நடிகர் பெஞ்சமின் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவில் “அனைவருக்கும் வணக்கம். நான் நடிகர் பெஞ்சமின் பேசுறேன். heart attack வந்து சேலத்துல ரெண்டு மூணு நாள் treatment எடுத்தேன். இங்க operation பண்ற அளவுக்கு வசதி இல்லை. பெங்களூர் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக சொல்லியிருக்காங்க.

இப்ப பெங்களூர் போயிட்டு இருக்கோம். எவ்வளவு செலவு ஆகப் போகுதுன்னு தெரியல. நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவ உதவி செய்யக்கூடிய நண்பரிடம் சொல்லி ஏதாவது மருத்துவ உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி” என்று நடிகர் பெஞ்சமின் பேசியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus