தனுஷுக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
December 10, 2021 / 03:06 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2002-ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் மகன் தனுஷை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் கஸ்தூரி ராஜா. இந்த படத்துக்கு பிரபல இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.
இந்த படம் ஹிட்டானதும், செல்வராகவனே தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தினை இயக்கினார். இதுவும் வெற்றி பெற்றவுடன், தனுஷ் நடித்த படம் ‘திருடா திருடி’. சுப்ரமணியம் சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ என்ற பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே அப்படம் மெகா ஹிட்டானது.
அதன் பிறகு பல படங்கள் நடித்த தனுஷுக்கு செல்வராகவனின் ‘புதுப்பேட்டை, மயக்கம் என்ன’, வெற்றிமாறனின் ‘பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்’ போன்ற படங்கள் அவரின் நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய ஸ்கோப்பாக அமைந்தது. பாலிவுட்டில் ‘ராஞ்சனா, ஷமிதாப்’, ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்’ என மற்ற மொழிப் படங்களிலும் தன் நடிப்பாற்றலால் அசரடித்தார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக அவதாரம் எடுத்து ‘ப.பாண்டி’ படத்தை இயக்கினார்.
இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘காதல்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பரத் நடித்திருந்தார். ஆனால், ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் பாலாஜி சக்திவேலின் முதல் சாய்ஸாக இருந்தது தனுஷ் தானாம். பின், சில காரணங்களால் தனுஷால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.