“சிறந்த கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள்”… விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய பாரதிராஜா!

  • October 10, 2020 / 04:29 PM IST

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படம் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி OTT-யில் ரிலீஸானது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். இந்த படத்தை OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் பார்க்க பிரத்யேகமாக ரூ.199 பணம் செலுத்த வேண்டுமாம்.

தற்போது, இந்த படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் “க/பெ.ரணசிங்கம் சிறந்த கதை பின்புலத்துடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் முதல் படைப்பை மிக அழுத்தமாக கூறி முத்திரை பதித்திருக்கும் விருமாண்டிக்கும், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus