தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைகளில் தாமதம் ஏற்பட்டதால் புதிய முயற்சியாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டது. அது முதலே பலவிதமான சிக்கல்களும் மோதல்களும் இருந்து வந்தது.
இந்த மோதல் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி தற்போது ஆக்டிவாக இருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர்கள் என்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தது.
இந்நிலையில் தற்போது பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து கிளையாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “இப்போதைய காலகட்டங்களில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. ஒரு மடை அடைத்துக்கொண்டால் இன்னொரு மடையை திறப்பது போல் தான் இதுவும். தாய் சங்கத்தை உடைக்கவில்லை. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாயநிலை, எதிர்கால கேள்விக்குறி ஆகியவற்றுக்கு பதில் தேடுவது அவசியம். கொரோனா சமயத்தில் இந்த சங்கம் கட்டாயமாக தேவைப்படுகிறது. அதனால் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் தற்போது தமிழ் திரைப்படவுலகில் இரண்டு தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா துறையில் தற்போது சில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Bharathiraja (@offBharathiraja) August 3, 2020