பரத் – வாணி போஜன் நடித்துள்ள ‘மிரள்’… 6 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • November 18, 2022 / 01:55 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பரத். இவர் நடிப்பில் ‘8, மிரள், முன்னறிவான், யாக்கை திரி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மிரள்’ திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல் இயக்கியுள்ளார். இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரசாத் SN இசையமைத்துள்ளார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கலைவாணன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இந்த படம் ரூ.72.45 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus