பரத்தின் த்ரில்லர் படமான ‘மிரள்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
November 11, 2022 / 10:14 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பரத். இவர் நடிப்பில் ‘8, மிரள், முன்னறிவான், யாக்கை திரி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மிரள்’ திரைப்படம் இன்று (நவம்பர் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல் இயக்கியுள்ளார். இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு பிரசாத் SN இசையமைத்துள்ளார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கலைவாணன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Miral review. First half- movie starts will slow pave then it picks up as time goes with excellent interval blocks . Second half- movie take twist and turns very nee attempt in screenplay .
#Miral Bharath and vani bhojan acted so natural they both really single handedly carry this movie . I hope many directors use @vanibhojanoffl for big deep roles she us so natural @bharathhere also ks Ravi kumar done his role so well pic.twitter.com/4PovBwyvee
#Miral#miralreview மிரள் படத்தின் கதாபாத்திரங்களுக்கே புரியாத நிகழ்வுகள் நடந்து கொண்டு இருப்பதை பார்வையாளர்களுக்கும் கடத்துவதில் வெற்றி பெற்ற இயக்குனர் முடிவில் பார்வையாளர்களை எம்மாற்றும் படி முடித்தது நியாயமாற்றது. It didn't work for me pic.twitter.com/EZrC9oZ8wV