பிரபல மலையாள நடிகை பாவனா , மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு,தமிழ் ஆகிய மொழிகளிலும் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றவர்.
தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி,வெயில், தீபாவளி,அசல் ஆகிய வெற்றி படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.
அதிகமாக மலையாளம் மற்றும் கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது பிசியாக கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.