நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் பூமிகா… வைரலாகும் வீடியோ!

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூமிகா சாவ்லா. பூமிகா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அது தான் ‘பத்ரி’. ‘பத்ரி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘ரோஜாக் கூட்டம்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நான்கு வருடங்கள் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த பூமிகா, 2016-ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் நடித்தார்.

இதில் ‘ஐஸ்வர்யா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி, பூமிகாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்கு பிறகு ‘களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். பூமிகா தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.

2007-ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பூமிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது பூமிகா நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். பிகினி உடை அணிந்து பூமிகா நீச்சல் குளத்தில் குளிக்கும் இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.