கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வந்தபிறகு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் ஆரவ். தற்போது இவருக்கு திருமண செய்தி மற்றும் புகைப்படங்கள் படு வைரலாக இணையதளத்தில் பரவி வருகிறது.
நடிகை ஓவியா மற்றும் ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதும், இவர்களுக்கு இடையே உள்ள காதலை மிகைப்படுத்தி டிஆர்பிக்காக பிக்பாஸ் குழுவினர் காட்டியதால் மன அழுத்தத்தில் ஓவியா தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
இந்நிலையில் பிக்பாஸ் ஆரவ்வுக்கு தற்போது திருமணம் நடந்துள்ளதாகவும் மணப்பெண் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவுள்ள “ஜோஸ்வா இமைபோல் காக்க” படத்தில் நடித்த ராஹே என்றும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடந்த இவர்கள் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் “இமைபோல் காப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CE2ErGrA8Li/?igshid=1sx1z45ba9jb8