தற்போது இணையதளம் முழுவதும் இந்திக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட டீசர்ட்களை பிரபலங்கள் அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இதில் இந்தி தெரியாது போடா, நாங்க தமிழ்பேசும் இந்தியன் டா போன்ற வாசகங்கள் அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா, உதயநிதி ஸ்டாலின், சாந்தனு பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பிரபலங்கள் இந்த டி-ஷர்ட் அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு அவை இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து பிக்பாஸ் நாயகி மற்றும் பிரபல நகைச்சுவை நடிகருமான ஆர்த்தி தனது கருத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் குறிப்பிட்டுள்ளதாவது “நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு, பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்…ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை” என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “இந்திய மொழிகளில் ஒன்று இந்தி அது வேண்டானு எதிர்பீங்க ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவனைப்பீங்க” என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆரத்தி வனிதா விஜயகுமார் கதையை ஸ்பூவ் மூவியாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/harathi_hahaha/status/1303267351748460544?s=19
https://twitter.com/harathi_hahaha/status/1303276858130137088?s=19