மடிசார் மாமியாக மாறிய பிக்பாஸ் ஜூலி!

  • August 8, 2020 / 02:30 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பங்கேற்பாளர் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

எப்படி இருந்த ஜூலி இப்படி ஆகிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் நடந்த பொழுது இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்ட பெண் ஜூலி, பின்பு 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார்.

தொடர்ந்து வந்த சர்ச்சையான விஷயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய ஜூலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி வந்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிக் பாஸ் ஜூலி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஸ்ரீக் இயக்கத்தில் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்” நடித்துவருகிறார்.

சமீபத்தில் ஜூலி நடத்திய பிரைடல் ஃபோட்டோஷூட்டை அடுத்து இவருக்கு திருமணம் என்று செய்தி படு வைரலாக பரவியது. இதையடுத்து கடற்கரையில் இவர் நடத்தியிருக்கும் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

https://twitter.com/lianajohn28/status/1291583265187328000?s=19

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படு ஸ்டைலாக மாறிய ஜூலி, முழு நேரமாக தற்போது பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் ஏற்கனவே நடத்திய போட்டோ ஷூட் வைரலாகி வரும் நிலையில், தற்போது மடிசார் கட்டிய மாமி போல் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus