உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பங்கேற்பாளர் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
எப்படி இருந்த ஜூலி இப்படி ஆகிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் நடந்த பொழுது இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட பெண் ஜூலி, பின்பு 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் உள்ளே வந்தார்.
தொடர்ந்து வந்த சர்ச்சையான விஷயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய ஜூலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி வந்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிக்பாஸ் ஜூலி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஸ்ரீக் இயக்கத்தில் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்” நடித்துவருகிறார்.
சமீபத்தில் ஜூலி நடத்திய பிரைடல் ஃபோட்டோஷூட்டையடுத்து இவருக்கு திருமணம் என்று செய்தி படு வைரலாக பரவியது. இதையடுத்து கடற்கரையில் இவர் நடத்தியிருக்கும் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படு ஸ்டைலாக மாறிய ஜூலி, முழு நேரமாக தற்போது பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் ஏற்கனவே நடத்திய போட்டோ ஷூட் வைரலாகி வரும் நிலையில் தற்போது மெழுகுவர்த்தி வைத்து புதுமையான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ” மெழுகுவர்த்திக்கு முழுமையான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அது தன் உடலை உருக்கி நமக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது. உங்கள் உயிரும் ஒரு மெழுகுதிரி போன்றது அதை அன்பு எனும் தீயால் ஏற்றினால் உங்களுக்கு வெளிச்சத்தை தரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/tv/CDotEmgh2sj/?igshid=1g7z4we0qj7ga
அதுமட்டுமின்றி மீண்டும் அவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதிது புதிதாக போட்டோஷூட் நடத்தி இந்த போட்டோக்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CDnZfXTBk8r/?igshid=7e5rfrrwcfwl
https://www.instagram.com/p/CDp-ZuVhQdV/?igshid=9d18x1k2mso5
https://www.instagram.com/p/CDsfos7BLuW/?igshid=1q35m5zdwymiq
1
2
3
4
5
6
7
8
9
10
11
12