சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷெரின். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே தனுஷுடன் தான். அது தான் ‘துள்ளுவதோ இளமை’. கஸ்தூரி ராஜா இயக்கியிருந்த இந்த படத்துக்கு செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார்.
இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ஷெரினுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேன்டா’ என தமிழ் படங்கள் குவிந்தது. மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ஷெரின்.
ஷெரின் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.