‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி ரெய்டு’ பாடல்… சூப்பராக பாடி அசத்திய ‘பிக் பாஸ் 4’ ஆஜித்!

  • February 20, 2021 / 06:45 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

தற்போது, ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர் ஆஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘தளபதி’ விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி ரெய்டு’ பாடலை சூப்பராக பாடி அசத்தியுள்ளார் ஆஜித். இந்த வீடியோவில் ஆஜித்துடன் ‘பிக் பாஸ் 4’யின் மற்ற போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணன், சம்யுக்தா ஆகியோரும் இருக்கிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus