விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படமான ‘அலேகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இயக்குநர் SS. ராஜமித்ரன் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ‘பிக் பாஸ்’ சீசன் 2 மூலம் ஃபேமஸான ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். இதில் ஆரியின் கேரக்டர் பெயர் ‘ஜோசப் விஜய்’யாம்.
Aleka Trailer Out Now
Trailer Link – https://t.co/wsYZe3DrMb@Aariarujunan @Aishwaryadutta6 @Glowstarcreati1 @srkarthik07 @johnsoncinepro @narayan_aadhi @shortfundly_ind#Aleka #TheProtector #Aari #AariArujunan pic.twitter.com/pcVZPbYAx0— Aari Arjunan (@Aariarujunan) January 1, 2021