‘பிக் பாஸ் 4’ ஆரி நடிக்கும் ‘பகவான்’… தீயாய் பரவும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

  • March 5, 2021 / 12:56 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி நடிக்கும் புதிய படமான ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இயக்குநர் காளிங்கன் இயக்கும் இப்படத்திற்கு பிரசான் பாலா இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இந்த படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் திருவண்ணாமலை அருகில் உள்ள செஞ்சி கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகர் ஆரியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.