“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை!
January 22, 2021 / 07:05 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி தான் டைட்டில் வின்னரானார். இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், ஆரி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம் நான் ஆரி அர்ஜுனன் பேசுறேன். எல்லாரும் என் முன்னாடி வைக்குற மிகப் பெரிய ஒரு கேள்வி, ஏன் இந்த வெற்றியை கொண்டாடல? அண்ணா ஏன் கொண்டாடல? தம்பி ஏன் கொண்டாடல? என் பிள்ளை மாதிரி இவ்ளோ பெரிய வெற்றியடைஞ்சிட்டு ஏன் கொண்டாடல? இது தான் எல்லாரும் என்கிட்ட கேட்கிற கேள்வி. இது நான் கொண்டாட வேண்டிய வெற்றி அல்ல. நாம கொண்டாட வேண்டிய வெற்றி. எப்படி கொண்டாடலாம் அப்படிங்குறதுல எனக்கு ஒரு சின்ன கோரிக்கையை உங்க முன்பு வைக்கிறேன். ஏன்னா இந்த கொண்டாட்டம் எப்படி இருக்கணும் அப்படின்னா, நியாயத்துக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் நீங்க கொடுத்த ஒரு வெற்றியா தான் நான் பார்க்குறேன் இந்த விளையாட்டுல.
அது என்கிட்ட மட்டும் இல்ல, நம்ம வீட்ல எல்லார்கிட்டயும் இருக்கு. அதுனால இது நாம எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற ஒரு வெற்றியா இது இருக்கட்டும். சமூக மாற்றத்திற்கான எந்த முயற்சியை வேண்டுமானாலும் நீங்க எடுங்க, அது உங்களோட சாய்ஸ்லையே நான் விட்டுறேன். அந்த மாதிரி ஒரு மாற்றத்திற்கான ஒரு முயற்சியா இந்த கொண்டாட்டமா மாறுச்சு அப்படின்னா மிகப் பெரிய கொண்டாட்டமா நாம எல்லாருமே சேர்ந்து கொண்டாடலாம். அப்படி நீங்க எடுக்குற போட்டோஸ், வீடியோஸ் எல்லாத்தையும் டேக் பண்ணுங்க. உங்களோட சேர்ந்து நானும் கொண்டாட தயாரா இருக்கேன். மாற்றத்திற்கான கொண்டாட்டமாக இந்த கொண்டாட்டம் இருக்கட்டும். இது தான் இந்த சமூகத்திற்கு இன்னைக்கு தேவையானது” என்று பேசியுள்ளார்.