‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 4’ நடிகை… வைரலாகும் ஸ்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு சமீபத்தில் அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

Bigg Boss 4 Actress Meets Vijay Sethupathi1

தற்போது, கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை நடிகை ஷிவானி நாராயணன் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஷிவானி நாராயணனே தனது ட்விட்டர் பக்கத்தில் “Man of Simplicity” என்று பதிவிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்லை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

Share.