அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2020) நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. சமீபத்தில், ரம்யா பாண்டியன், டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தயாரித்திருந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கியிருந்தார். இதில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து பாப்புலர் நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இப்போது ரம்யா பாண்டியன் ‘இடும்பன்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.