சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரேகா. இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘கடலோரக் கவிதைகள்’. அந்த படம் சூப்பர் ஹிட்டானதும் இவரின் கால்ஷீட் டைரியில் ‘புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, இனி ஒரு சுதந்திரம், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கதாநாயகன், ராசாவே உன்னை நம்பி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், சிகரம், குணா’ என படங்கள் குவிந்தது.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 1996-ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேகா. இவர்களுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். ஆரம்பத்தில் ஹீரோயினாக வலம் வந்த ரேகா இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
பின், ரேகா ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது, இவர் நடிப்பில் ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, கே.பாக்யராஜின் ‘குஸ்கா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவ்விரண்டு படங்களிலும் நடிகை ரேகா முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். இந்நிலையில், நடிகை ரேகாவின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி என தகவல் கிடைத்துள்ளது.