தீயாய் பரவும் வீடியோ… ‘பிக் பாஸ் 4’ அனிதாவின் கணவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!

  • February 27, 2021 / 06:42 PM IST

ஆரம்பத்தில் ‘நியூஸ் 7’ சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு சன் டிவியில் நியூஸ் வாசிக்க என்ட்ரியானார். அங்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவர் ‘2.0, சர்கார், காப்பான், மாஸ்டர்’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. சமீபத்தில், அனிதா சம்பத்திற்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தற்போது, அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அறந்தாங்கி நிஷா அக்கா மற்றும் ‘குக் வித் கோமாளி’ தீபா அக்காவுடன் இணைந்து எனது கணவர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டு அவ்வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus