சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சி தான் அர்ச்சனா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி. அதன் பிறகு சன் டிவியில் ‘இளமை புதுமை’, விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம்’, கலைஞர் டிவியில் ‘வீடு மனைவி மக்கள்’, புதுயுகம் டிவியில் ‘Celebrity Kitchen’, ஜீ தமிழில் ‘அதிர்ஷ்ட லக்ஷ்மி, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 1 & 2, சரிகமப சீனியர்ஸ் சீசன் 1 & 2’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேலும், ‘என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ண வெக்கல, நான் சிரித்தால்’ போன்ற திரைப்படங்களிலும் அர்ச்சனா நடித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அர்ச்சனா. இவர்களுக்கு சாரா என்ற மகள் உள்ளார். சமீபத்தில், அர்ச்சனாவுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தற்போது, இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் அர்ச்சனாவிடம் “நீங்க ஏன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டீங்க?” என்று கேட்க, அதற்கு அர்ச்சனா வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது மகளிடம் “ஏண்டி போனோம்?” என்று கேட்கிறார், அதற்கு சாரா “நாங்களும் அதான் யோசிச்சிட்டு இருக்கோம்” என்று சொல்கிறார். பின், இருவரும் சிரிக்கிறார்கள்.