விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ், மிஸ்டர் இண்டர்நேஷனல், மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டவர். இவர் சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, ‘டைசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாராம். இந்த படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவே இல்லை.
இதனைத் தொடர்ந்து ‘கரோலின் காமாட்சி’ என்ற ‘ஜீ 5’ வெப் சீரிஸில் நடித்தார் பாலாஜி முருகதாஸ். மீனா ஹீரோயினாக நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்போது பாலாஜி முருகதாஸுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. தற்போது, பாலாஜி முருகதாஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
https://www.instagram.com/p/CGWqRk6MY10/?igshid=1ue93rw1uc8u7
https://www.instagram.com/p/CGFUD2-seeo/?igshid=19mkr1czpmova
https://www.instagram.com/p/CGFRi8TsKfN/?igshid=bv9z3leazdok
https://www.instagram.com/p/CGFQ6SRsgQ7/?igshid=1uohjfkkfopim