நம்ம ‘பிக் பாஸ் 4’ பாலாஜியா இது?… செம ஸ்டைலிஷ் லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

  • March 18, 2021 / 11:54 AM IST

பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ், மிஸ்டர் இண்டர்நேஷனல், மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டவர். இவர் சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, ‘டைசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாராம். இந்த படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவே இல்லை.

இதனைத் தொடர்ந்து ‘கரோலின் காமாட்சி’ என்ற ‘ஜீ 5’ வெப் சீரிஸில் நடித்தார் பாலாஜி முருகதாஸ். மீனா ஹீரோயினாக நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. சமீபத்தில், பாலாஜி முருகதாஸுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். தற்போது, பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். பாலாஜி செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus