இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 4’ அனிதா சம்பத்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 10, 2020 / 05:34 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் ‘நியூஸ் 7’ சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு சன் டிவியில் நியூஸ் வாசிக்க என்ட்ரியானார். அங்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ‘2.0, சர்கார், காப்பான்’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. இப்போது அனிதா சம்பத்திற்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத அனிதா சம்பத்தின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus