விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
டாப் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரியின் மகனும், பாப்புலர் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘ஜித்தன்’. இந்த படம் ஹிட்டானதும் ரமேஷின் கால்ஷீட் டைரியில் ‘மது, ஜெர்ரி, நீ வேணுன்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஒஸ்தி, ஜித்தன் 2, ஒங்கள போடணும் சார்’ என படங்கள் குவிந்தது. 2006-ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜித்தன் ரமேஷ். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இப்போது ஜித்தன் ரமேஷுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ஜித்தன் ரமேஷின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26