விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ரேகா தமிழில் அறிமுகமான முதல் படமே ‘கடலோரக் கவிதைகள்’. அந்த படம் சூப்பர் ஹிட்டானதும் இவரின் கால்ஷீட் டைரியில் ‘புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, இனி ஒரு சுதந்திரம், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கதாநாயகன், ராசாவே உன்னை நம்பி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், சிகரம், குணா’ என படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 1996-ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேகா. இவர்களுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். ஆரம்பத்தில் ஹீரோயினாக வலம் வந்த ரேகா இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரேகாவுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ரேகாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21