இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 4’ சனம் ஷெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 8, 2020 / 07:58 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை சனம் ஷெட்டி தமிழில் அறிமுகமான முதல் படமே ‘அம்புலி’. அதன் பிறகு சனம் ஷெட்டியின் கால்ஷீட் டைரியில் ‘கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, வால்டர்’ என படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த ‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் – சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது சனம் ஷெட்டிக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சனம் ஷெட்டியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus