இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 4’ வேல்முருகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 8, 2020 / 08:07 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சினிமாவில் பாப்புலரான பின்னணி பாடகரான வேல் முருகனுக்கு முதல் வாய்ப்பு ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் தான் அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘மதுரை குலுங்க குலுங்க’ பாடலை பாடி அசத்தியதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அதன் பிறகு ‘ஆடுங்கடா மச்சான், ஒத்த சொல்லால, சங்கிலி புங்கிலி, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், வேணாம் மச்சான், போட்டது பத்தல மாப்பிளை, கொஞ்சும் கிளி, கருப்பு நிறத்தழகி’ போன்ற பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பாடகர் வேல் முருகன், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது பாடகர் வேல் முருகனுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத பாடகர் வேல் முருகனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus