ஜாலியாக ‘டிக் டிக்’ விளையாடும் ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள்… வைரலாகும் ப்ரோமோ!

  • October 5, 2020 / 07:51 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 நேற்று (அக்டோபர் 4-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அனைத்து போட்டியாளர்களும் ‘டிக் டிக் யாரது?’ என்ற விளையாட்டை ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus