• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ்’ சீசன் 4-யின் போட்டியாளர்கள் நடிக்கும் புதிய படங்களின் லிஸ்ட்!

‘பிக் பாஸ்’ சீசன் 4-யின் போட்டியாளர்கள் நடிக்கும் புதிய படங்களின் லிஸ்ட்!

  • January 21, 2021 / 10:33 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ சீசன் 4-யின் போட்டியாளர்கள் நடிக்கும் புதிய படங்களின் லிஸ்ட்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ரியோ ராஜ் :

ரியோ ராஜ் நடிப்பில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

2.சனம் ஷெட்டி :

சனம் ஷெட்டி நடிப்பில் ‘மஹா, எதிர் வினையாற்று’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மஹா’ படத்தில் ஹன்ஷிகா, சிலம்பரசன் ஜோடியாக நடிக்க முக்கிய ரோலில் சனம் ஷெட்டி நடித்துள்ளார். ‘எதிர் வினையாற்று’ படத்தில் அலெக்ஸ் என்பவர் ஹீரோவாக நடித்து, அவரே இளமைதாஸ் என்பவருடன் இணைந்து இயக்கியுள்ளார்.

3.ரேகா :

ரேகா நடிப்பில் ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, யோகி பாபுவின் ‘பேய் மாமா’, சசிகுமாரின் ‘ராஜவம்சம்’, கே.பாக்யராஜின் ‘குஸ்கா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நான்கு படங்களிலும் நடிகை ரேகா முக்கிய ரோலில் நடித்துள்ளாராம்.

4.ஆரி :

ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் SS. ராஜமித்ரன் இயக்கும் ‘அலேகா’ படத்தில் ஹீரோயினாக ‘பிக் பாஸ்’ சீசன் 2 மூலம் ஃபேமஸான ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். இயக்குநர் காளிங்கன் இயக்கும் ‘பகவான்’ படத்திற்கு பிரசான் பாலா இசையமைத்து கொண்டிருக்கிறார். இயக்குநர் கவிராஜ் இயக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தில் ஹீரோயினாக ஷாஷ்வி பாலா நடிக்கிறார்.

5.சம்யுக்தா கார்த்திக் :

சம்யுக்தா கார்த்திக் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பாரத்திபன் இணைந்து நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தில் முக்கிய ரோலில் சம்யுக்தா கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரித்து கொண்டிருக்கிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் கெளதம் கார்த்திக் – ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க உள்ளனர்.

6.சுரேஷ் சக்கரவர்த்தி :

சுரேஷ் சக்கரவர்த்தி நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த படத்தை விஷாலே தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இதில் சுரேஷ் சக்கரவர்த்தி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

7.அர்ச்சனா :

அர்ச்சனா நடிப்பில் ‘டாக்டர்’ என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்து கொண்டிருக்கிறார். இதில் முக்கிய ரோலில் அர்ச்சனா நடிக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aari
  • #Archana
  • #Bigg Boss 4
  • #contestants
  • #Rekha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7 : “என்ன நீங்க பாவமாலாம் காட்ட வேண்டாம்”… அர்ச்சனா – சரவணா விக்ரம் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “என்ன நீங்க பாவமாலாம் காட்ட வேண்டாம்”… அர்ச்சனா – சரவணா விக்ரம் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீயெல்லாம் பொண்ணாடி கருமம்”… அர்ச்சனா – நிக்ஷன் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீயெல்லாம் பொண்ணாடி கருமம்”… அர்ச்சனா – நிக்ஷன் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “சின்ன வயசுல அனுபவிக்க வேண்டிய எதுவுமே அனுபவிக்கல”… கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

Bigg Boss Tamil 7 : “சின்ன வயசுல அனுபவிக்க வேண்டிய எதுவுமே அனுபவிக்கல”… கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

Joe : 5 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 5 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 4 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 4 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version