‘பிக் பாஸ் 4’ : பாலாஜிக்கு எதிராக சனம் எழுதிய சர்ச்சையான விஷயம்… ப்ரோமோவை நீக்கிய விஜய் டிவி!
November 3, 2020 / 07:39 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். இன்று காலை விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது.
பின், கொஞ்ச நேரத்தில் அவ்வீடியோ பதிவு நீக்கப்பட்டது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் விவாத மன்றம் டாஸ்கில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் வீட்டில் இருக்கும் மற்றொரு ஹவுஸ்மேட் உடனிருக்கும் கருத்து வேறுபாடுகளை பதிவு செய்ய வேண்டும். அப்போது, பாலாஜி முருகதாஸுக்கு எதிராக சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் “அட்ஜஸ்ட்மென்ட், காம்பிரமைஸ் ஆகிய வார்த்தைகளை தான் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அழகிப் போட்டி நடத்திய நிறுவனத்திற்கு எதிராக பாலாஜி பேசினார்” என்று குறிப்பிடுகிறார். இது சர்ச்சையாகும் என்பதால் தான் அந்த ப்ரோமோவை விஜய் டிவி நீக்கியது என்று சொல்லப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.