இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ‘பிக் பாஸ்’ ரசிகா… சீசன் 4 எத்தனை நாட்கள் நடக்கப்போகுதுன்னு தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 நாளை (அக்டோபர் 4-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான 10 ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த 10 ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

நடிகை ரேகா, நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், நடிகை கேப்ரில்லா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன், தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் ரியோ ராஜ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, மாடல் பாலாஜி முருகதாஸ், மாடல் சோமசேகர், பாடகர் வேல்முருகன் ஆகிய 15 பிரபலங்கள் கலந்து கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது.

இதுவரை 100 நாட்களுக்கு மேல் நடந்த இந்நிகழ்ச்சி இந்த முறை கொரோனா பிரச்சனையால் 80 நாட்கள் மட்டுமே நடக்கும் என்று தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில். ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-யின் ட்விட்டரில் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா” என்று குறிப்பிட்டு ராசி பலன் போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிகழ்ச்சி 105 நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Share.