கேங்க்ஸ்டர் வெப் சீரிஸில் ‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியன்… வெளியானது மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

  • October 15, 2020 / 10:44 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் நடிகை ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸானவர். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். தற்போது, ரம்யா பாண்டியன் ‘பிக் பாஸ்’ வீட்டில் என்ட்ரியாவதற்கு முன்பு ‘முகிலன்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதனை ஸ்ரீ ராம் ராம் என்பவர் இயக்கியுள்ளார். கேங்க்ஸ்டர் த்ரில்லர் டிராமா ஜானர் வெப் சீரிஸான இதில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் நடித்துள்ளார். இவ்வெப் சீரிஸை வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus