ரியோ ராஜின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோஸ்!

  • February 21, 2021 / 08:46 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் : கல்லூரி சாலை’ சீரியல் மூலம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதன் பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3-யில் ஹீரோவாக வலம் வந்தார். அப்படியே விஜய் டிவியில் சில ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த ரியோவை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

இந்த படத்துக்கு பிறகு ரியோ ராஜ் நடித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. 2017-ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரியோ. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில், ரியோ ராஜுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) நடிகர் ரியோ ராஜின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரியோ தனது குடும்பத்தினர் மற்றும் ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus