விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். தற்போது, நடிகர் ரியோ ராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இப்ப நான் ரொம்ப நல்லா இருக்கேன். ‘பிக் பாஸ்’ சீசன் 4 எனக்கு ஒரு அழகான beautiful journey-ஆ இருந்தது.
அது நான் வெளியில வந்து பார்க்கும்போது, நீங்க எல்லாரும் பண்ணியிருந்த support அந்த வீடியோஸ், போட்டோஸ் அதெல்லாம் பார்க்கும் போது பயங்குற ஹேப்பியா இருந்தது. thank you so much இவ்ளோ support and love எனக்கு கொடுத்ததுக்கு. அடுத்து நிறையா வேலை இருக்கு. அது எல்லாத்தையுமே ஒவ்வொன்னா ப்ளான் பண்ணி பண்ணலாம். இப்போ இவ்ளோ love and support அந்த positivity கொடுத்த உங்க எல்லாருக்குமே ரொம்ப நன்றி. bye” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Thank you so much for all the Love and Positivity 💓
Take ittu 😘 everybody 🤗#biggbosstamil #biggbossseason4 #takeittu #rioraj @vijaytelevision pic.twitter.com/q9QYPNgi3b— Rio raj (@rio_raj) January 20, 2021