ரியோ மகளின் முதல் பர்த்டே கொண்டாட்டம்… கலந்து கொண்ட ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் : கல்லூரி சாலை’ சீரியல் மூலம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதன் பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3-யில் ஹீரோவாக வலம் வந்தார். அப்படியே விஜய் டிவியில் சில ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த ரியோவை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

2017-ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரியோ. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில், ரியோ ராஜுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்துக்கு பிறகு ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’.

பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, மகள் ரிதியின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸை ரியோ ராஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ‘பிக் பாஸ் 4’யின் மற்ற போட்டியாளர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Rio Raj (@rio.raj)

1

2

3

4

5

6

7

8

9

Share.