விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 நேற்று முன் தினம் (அக்டோபர் 3-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரபல நடிகையும், திருநங்கையுமான நமீதா மாரிமுத்து, சசிக்குமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் வெளியான ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். மிஸ் ட்ரான்ஸ் அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை புரிந்த திருநங்கை நமீதா மாரிமுத்துவிற்கு இப்போது அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்திருக்கும் முதல் திருநங்கையும் இவர்தான். இதுவரை யாரும் பார்த்திராத நமீதா மாரிமுத்துவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34