‘பிக் பாஸ் 5’ டைட்டில் வின்னரான ராஜுவை நேரில் சந்தித்த இமான் அண்ணாச்சி… வைரலாகும் வீடியோ!

  • January 19, 2022 / 07:05 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் அபிஷேக் ராஜா. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி ஆனார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி ஆனார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அக்ஷரா ரெட்டி மற்றும் வருண் ஆகிய இருவருமே எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி சஞ்சீவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ‘பிக் பாஸ்’ கொடுத்த 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறிவிட்டார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 16-ஆம் தேதி நிரூப், அமீர் மற்றும் பாவனி எலிமினேட் செய்யப்பட்டனர்.

அதன் பிறகு ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். தற்போது, நடிகர் ராஜு ஜெயமோகனும், நடிகர் இமான் அண்ணாச்சியும் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இமான் அண்ணாச்சியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், ராஜுவுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus