பிக் பாஸ் 6 – மக்களிடையே அதிகரித்து இருக்கும் எதிர்பார்ப்பு !

  • October 8, 2022 / 06:02 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது . மேலும் பிக் பாஸ் 6-வது சீசனுக்கான போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது .

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளரான ரக்சன் ,சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பாடகி ராஜலட்சுமி , விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திவ்யதர்ஷினி , மைனா நந்தினி ஆகியோர் இந்த ஆண்டு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் டி. இமான் அவர்களின் முன்னாள் மனைவி மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகியோர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது . இதனால் பிக் பாஸ் 6 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus