‘கொரோனா’ இரண்டாவது அலை… திருவண்ணாமலையில் ‘பிக் பாஸ்’ ஆரி செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!
June 11, 2021 / 07:15 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் ஆரி அவரது ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை சார்பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 பேருக்கு அன்னதானம் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.