சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அபிநய். இவர் நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்திரியின் பேரனாம். அபிநய் அறிமுகமான முதல் தெலுங்கு படம் ‘யங் இந்தியா’. இந்த படத்துக்கு பிறகு அபிநய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராமானுஜன், சென்னை 28 – 2, விளம்பரம்’ என படங்கள் குவிந்தது.
அதன் பிறகு அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அபிநய். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த ஆண்டு (2021) அபிநய்-க்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 5 என்ட்ரி. சீசன் 5-க்கு பிறகு பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் அபிநய்.
பின், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தான் அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், அபிநய் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “நீங்கள் உங்களது மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா?” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அபிநய் “இந்த செய்தியை பார்த்ததும் நான் ரொம்ப ஷாக் ஆனேன். இதுபோன்ற தவறான செய்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.