“டாப் இயக்குநர்களின் படத்தில் தான் நடிப்பேன்”… ஓவரா சீன் போடும் ‘பிக் பாஸ்’ நடிகர்!

பிரபல சேனலில் ஒளிபரப்பான காலேஜ் ட்ரீம் சீரியல் மூலம் ஃபேமஸானவர் அந்த நடிகர். அதன் பிறகு ஒரு மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நடிகரை ஒரு படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டிய நடிகர் தான் இந்த படத்தை தயாரித்தார். இதன் பிறகு அந்த நடிகர் பக்கவாக ப்ளான் பண்ணி நடித்த ஒரு புதிய படம் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

பின், அந்த நடிகருக்கு அடித்தது ஜாக்பாட். டாப் ஹீரோ தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். இப்போது இந்த நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என்று ஆசைப்பட்டு புதிய இயக்குநர்கள் படையெடுத்து சென்று கதை சொன்னால், ஓவரா சீன் போடுகிறாராம். இனிமே நடித்தால் டாப் இயக்குநர்களின் படத்தில் தான் நடிப்பேன் என்று சொல்கிறாராம் அந்த நடிகர்.

Share.